பிரபல தனியார் தொலைக்காட்சியில் உச்சநட்சத்திரமாக வளம் வந்தவர் பூஜா ராமச்சந்திரன். இவர் காதலில் சொதப்புவது எப்படி?, பீட்சா மற்றும் காஞ்சனா 2, நண்பேன்டா போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதனைப்போன்று ரா, தேவி ஸ்ரீ பிரசாத், தோசாய் போன்ற பல்வேறு தெலுங்கு மொழி திரைப்படத்திலும், மலையாள திரையுலகிலும் நடித்துள்ளார். மேலும், இவர் தனியார் தொலைக்காட்சியின் வீடியோ ஜாக்கியான கிரெய்க் கோலியாட்டை காதலித்து வந்தார்.
பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த 2010 ஆம் வருடம் திருமணம் செய்த காதல் ஜோடி, கண்டனத்தை 2017 ஆம் வருடத்தில் குடும்ப சண்டையில் பிரிந்தனர்.
இதன் பின்னர், ஜான் கொக்கைன் என்ற நடிகரை திருமணம் செய்து வாழ்ந்து வரும் நிலையில், இவர் தனது கணவருடன் மாலத்தீவில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இருவரும் நீச்சல் உடையில் கொண்டாடிய பிறந்த நாள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், கரோனா அச்சத்தால் மக்கள் பெரும் பரிதவிர்க்கு உள்ளாகியுள்ள நிலையில், அனைத்தும் கர்மா என்று கூறி இவர் பதிவு செய்தது வைரலாகியுள்ளது.