உத்திர பிரதேசம் மாநிலத்தில் பல பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவங்கள் அதிகளவு அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், நண்பனை காண சென்று, நண்பன் இல்லாத நேரத்தில் அவன் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் இருக்கிறது நெர்வழி கிராமம். இந்த கிராமத்தை சார்ந்த நபர், தனது நண்பரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், இவர் இல்லத்திற்கு சென்ற நேரத்தில் நண்பனின் பெற்றோர்கள் மற்றும் நண்பன் வீட்டில் இல்லை.
நண்பனின் தங்கை மட்டும் இல்லத்தில் தனியாக இருந்த நிலையில், சிறுமியை பலவந்தப்படுத்தி கத்திமுனையில் காமுகன் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளான்.
இதனால் பயந்துபோன சிறுமி இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்து வந்த நிலையில், இவரது நடவடிக்கையை கண்டு சந்தேகித்த பெண்ணின் தந்தை விசாரிக்கையில், கண்ணீருடன் தனக்கு நடந்ததை கூறியுள்ளார்.
இதனையடுத்து பெண்ணின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.