சீன நாட்டில் உள்ள ஹூபேய் மாகாணத்தில் இருக்கும் யூகான் நகரில் இருந்து பரவ துவங்கிய கரோனா வைரஸானது, உலகளவில் 196 நாடுகளுக்கு பரவியுள்ளது. மேலும், உலகம் முழுவதிலும் 422,566 பாதிக்கப்பட்டுள்ளனர். 18,887 பேர் பலியாகியுள்ளனர்.
இந்திய நாட்டில் கரோனா வைரஸிற்கு 536 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸின் அதிதீவிர பரவும் தன்மையின் காரணமாக இன்றிரவு 12 மணிமுதலாக வரும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிற பணிகளுக்கு வெளியே நடமாடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய தேவைகளுக்கான போக்குவரத்து இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை வலியுறுத்தி மத்திய அரசும், மாநில அரசும் பல அதிரடி உத்தரவுகளையும், விழிப்புணர்வையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மாஸ்டர் படத்தில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது தாய் தந்தைக்காக வீட்டில் இருப்பதாக எழுதி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.