“தலைக்கு எண்ணெய் வைக்கவே மாட்டீய்யா” அம்மா திட்டும்போதெல்லாம், அம்மா இப்போதெல்லாம் யாரும் தலைக்கு எண்ணெய் வைக்குறது இல்லை… இது பேஷன்… உங்களுக்கு இதெல்லாம் தெரியாதுன்னு… இந்த கால பெண்கள் பல பேர் சொல்வதை கேட்டுருக்கிறோம்…”
பெரியவர்கள் காரணம் இல்லாமல் யாரையும் எதையும் சொல்ல மாட்டாங்க. அவங்க திட்டுறது எல்லாம் நம் நன்மைக்குத்தான் இருக்குமே தவிர, ஒரு நாளும் அது தவறாகாது.
இந்த காலக்கட்டத்தில் எல்லோருமே வேலைக்கு செல்கிறார்கள். தலையில் எண்ணெய் வைத்துவிட்டால் முகம் முழுவதும் எண்ணெய் வழியும் என்பதற்காக சில பேர் தலையில் எண்ணெய் வைப்பதையே தவிர்த்துவிடுகிறார்கள்.
சில பேருக்கு தலையில் எண்ணெய் வைத்தாலே அலர்ஜி போல் நினைக்கிறார்கள். எண்ணெய் வைத்தால் முகம் புத்துணர்ச்சி இல்லாமல் டல்லாக இருக்கும் என்பதற்காகவே இதை தவிர்த்துவிடுகிறார்கள்.
தலையில் முடி சிக்கு இல்லாமல் இருக்கவும், முடி பளபளப்பாக இருக்க பல வித மாய்ஸ்ரைஸர் வந்துவிட்டன. ஆனால் தலைக்கு இயற்கையான மாய்ஸ்சரைஸர் எண்ணெய்தான். புரோட்டீனால் உருவாவது தான் முடி. முடிந்தால் இரவிலாவது தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவி விட்டு காலையில் தலைக்கு குளியுங்கள்.
பெண்களுக்கு அழகில் முக்கிய பங்கு முடிகளுக்கு உள்ளது. நீளமான தலைமுடி அழகில் மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எனவே தலைமுடிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
முடி வேர்கள் வலிமையாக இல்லாமல் இருந்தால் தலைமுடி உதிரும். அதற்கு தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
முடி வேர்கள் எண்ணெயை நன்கு உறிஞ்சிக்கொள்ளும் தன்மை கொண்டது. மேலும் எண்ணெய் வைத்து தலையை மசாஜ் செய்யும்போது தலையில் ரத்த ஓட்டம் சீராகி முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இதனால் வேர்கள் வலிமையடைந்து தலைமுடி கொட்டுவதும் குறையும்.
காற்று மாசுபாட்டல் கூட தலைமுடி உதிரும். உடலில் காய்ச்சல் ஏற்படாலும் முடி உதிரும். தலைமுடியை சேதப்படுத்தும் விஷயங்கள் பல இருக்கின்றன. இதற்கு வழி தலைக்கு முறையாக எண்ணெய் தடவி வர வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் எந்த பிரச்சினையும் இருக்காது.
தலைக்கு எண்ணெய் வைத்து நன்கு ஊறிய பின் தலைக்குக் குளித்துப் பாருங்கள். தலைமுடி பளபளவென மின்னும்.
பொடுகுத் தொல்லைக்கு தலைமுடி வறட்சிதான் காரணம். இன்று பொடுக்குத் தொல்லையால் பல பேர் அவதிப்படுகிறார்கள். இப்பிரச்சினை இதனால்தான் ஏற்படுகிறது. தலைக்கு எண்ணெய் வைப்பது வேர்களுக்கு ஊட்டமளித்து முடியை உறுதியாக்குகின்றன.
உடல் சூட்டையும் தணித்து உடலுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கிறது தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தால் நாள்தோறும் நீங்கள் புத்துணர்ச்சியாக இருப்பதை உணரலாம்.
வைட்டமின்கள், புரோட்டீன்கள் கிடைக்காமல், நிறத்தை வழங்கும் நிறமியான மெலனின் குறைந்து இளம் வயதிலேயே முடி நரைக்க ஆரம்பிக்கிறது. தலைக்கு தினமும் எண்ணெய் வைத்துக்கொண்டு வந்தால் நரைமுடிகள் வளர ஆரம்பிக்காது.
தினமும் காபி, டீ குடிப்பதை கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளலாம். அன்றாடம் உணவில் நிறைய கீரைகள், பழங்கள், காய்கறிகளை சாப்பிடுங்கள். தலைக்கு வாரத்திற்கு இரு முறை எண்ணெய் தேய்த்துக் குளியுங்கள்.