நாட்டையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் முழுவது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த அறிவிப்பு வரும் வரை சாம்சங் நிறுவன ஒப்போ மற்றும் விவோ போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் மொபைல் போன் ஆலைகளில் உற்பத்தி பணிகள் துவங்காது என தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடுமுழுக்க மக்கள் வெளியில் வர கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே இந்த உற்பத்தி நிறுத்தம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊழியர்களின் நலம் கருதியும், அவர்களது குடும்பத்தார் கொரோனா மூலம் பாதிக்கப்படாமல் இருக்கவும், அரசு வழிமுறைகளை பின்பற்றும் விதமாக நொய்டா ஆலையின் உற்பத்தி பணிகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சாம்சங் செய்தி தொடர்பாளர் தெரிவித்தள்ளார்.
இதனை தொடர்ந்து மேலும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ ஃபேக்ட்ரியில் பணியாற்றாத ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றவும் எரிக்சன் மற்றும் நொய்டா போன்க நிறுவனங்களில் சமூக இடைவெளி அடிப்படையில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிகிறது.