ஊரடங்கு அமுலில் உள்ள போது கூட அடாவடியில் ஈடுபட்ட குழு!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடலாவிய ரீதியில் கடந்த 20ம் திகதி மாலை அரசாங்கத்தினால் ஊரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் மக்களை வீதிக்கு இறங்வேண்டாமெனவும் மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூட வேண்டாமெனவும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் இரவு 09மணிஅளவில் மதுபோதையில் இனந்தெரியாத குழு ஒன்று நோர்வூட் நகரில் உள்ள பிரதான பேருந்துநிலையத்தில் நான்கு பக்கமும் சுற்றி பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகளைசேதமாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டிருந்த வேளை பொதுமக்களின் சொத்துகளுக்கு மது போதையில் வந்த குண்டர்கள் குறித்த பேருந்து நிலையத்தை சேதபடுத்தியுள்ளனர். அவர்களைக் கைது செய்ய விரட்டி சென்ற போதும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாவும் தப்பி சென்றவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பேருந்து நிலையத்தினை சேதபடுத்தியவர்கள் நோர்வூட் மற்றும் பொகவந்தலாவ பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது இதேவேளை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்ட காலபகுதியில் இருந்து முழு மலையகமும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.