நடிகை ஸ்ருதி ஹாசனிடம் ரசிகர்கள் கேட்ட அந்த ஒரு கேள்வி!

நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக கலக்கியவர். நடிப்பையும் தாண்டி அவர் பாடல்கள் பாடுவதிலும் திறமை காட்டி வந்தார்.

ஹிந்தி, தெலுங்கு சினிமாவிலும் அவர் தன் திறமையை வெளிப்படுத்தினார். ஆனால் அவருக்கு பெரியளவில் பட வாய்ப்புகள் அமையவில்லை.

இந்நிலையில் அவர் வெளி நாடுகளில் மேடை கச்சேரிகளை செய்து வந்தார். தற்போது உலகம் முழுக்க கொரோனா வைரஸால் நோய் தொற்று என்னும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் கொரோனாவுக்கு நிரந்தர தீர்வாக மருந்துகள் இன்னும் ஆய்வு நிலையில் இருக்கின்றன.

சினிமா பிரபலங்கள் பலரும் மக்களை கவனமாகவும் சுகாதாரமாகவும் இருக்கச்சொல்லி அறிவுருத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் கொரோனாவிலிருந்து மக்களை குணப்படுத்த போதி தர்மரை மீண்டும் அழைத்து வாருங்கள் என வேடிக்கையாக மீம் போட்டுள்ளனர்.

இதனை ஸ்ருதி ஹாசனும் பகிர்ந்துள்ளார். போதி தர்மராக சூர்யா 7 ம் அறிவு படத்தில் நடித்திருந்ததும், ஸ்ருதி மருத்துவ ஆராச்சியாளராக போதி தர்மர் மரபணுவை மீட்டு கொண்டுவந்ததும் நினைவிருக்கும் தானே.