மாஸ்டர் இடைவேளை காட்சி இப்படி இருக்குமா?

தளபதி விஜய் ந்டிப்பில் மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதாக இருந்த்து. ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் இப்படம் தள்ளிச்சென்றது.

இந்நிலையில் மாஸ்டர் படம் அடுத்து மே மாதம் திரைக்கு வரலாம் என்று செய்திகள் வெளிவந்துள்ளது, இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இடைவேளை காட்சி இப்படித்தான் இருக்கும் என சில செய்திகள் கசிந்துள்ளது.

அதில் விஜய் கல்லூரி ஆசிரியராக இருக்க, அதை தொடர்ந்து பேட்ட படம் போல் இடைவேளையில் விஜய் யார் என்ற விவரம் தெரியவர, அதிலிருந்து ப்ளாஷ்பேக் காட்சிகள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஆனால், விஜய் தன் அடையாளத்தை மறைத்தே கல்லூரி ஆசிரியராக இருப்பார் என்று தான் பலரும் எதிர்ப்பார்க்கும் ஒரு விஷயம்.

அதோடு மாஸ்டர் படத்தில் விஜய் இரண்டு விதமான கெட்டப்பில் வருவதாகவும், அதில் ஒரு கெட்டப்பில் விஜய் மீசையை எடுத்து வருவதாக சில செய்திகள் கிடைத்துள்ளது.