மாநகரம் எனும் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு ஒரு இளம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வெற்றியடைந்தது.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்திகை வைத்து கைதி எனும் படத்தை திரையுலகிற்கு கொடுத்தார்.
இப்படம் நடிகர் கார்த்திக்கின் திரையுலக பயணத்திற்கு மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது.
ஆம் இப்படம் வசூல் ரீதியாக மட்டும் ரூபாய் 100 கோடி வசூலித்து நடிகர் கார்த்திக்கு மிக பெரிய பெயரை ரசிகர்கள் மத்தியில் வாங்கி தந்தது.
இதற்கு பிறகு தான் தமிழ் சினிமாவின் தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ்.
இந்நிலையில் கொரானாவால் வேலை இல்லாமல் FEFSI ஊழியர்கள் தவித்து வருகின்றனர். இதனால் பல முன்னணி நடிகர்கள் தங்களால் முடிந்த உதவி தொகையை கொடுத்து உதவி வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 50 ஆயிரம் உதவி தொகையாக கொடுத்துள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.