வெளியில் போனால் அது ஒருவரை கொலை செய்வதற்கு சமம்! கொரோனா ஆபத்து…..

பிரபல நடிகர் அர்ஜுன் கோரோனோ வைரஸ் பற்றி அவருடைய நண்பர் கூறிய விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

என்னுடைய நண்பர் இத்தாலியில் நர்சாக இருக்கிறார் . ஒரு நாளைக்கு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை இந்த வைரஸின் பாசிட்டிவ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

நாளுக்கு நாள் இந்த வைரசின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.


மேலும் 500 முதல் 600 பேர் வரை கொத்துக்கொத்தாக இருந்து கொண்டிருக்கின்றனர். இதை பார்க்கும்போது எந்த அளவிற்கு நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அந்த ஊரில் ஜாக்கிரதையாக மருத்துவ உபகரணங்கள் கூட இல்லாமல் போய்விட்டது .நம் மக்களுக்கு இந்த நிலை வந்தால் அதனை யோசித்து கூட பார்க்க முடியாது.

இதற்காக நாம் பணம் செலவு செய்ய வேண்டாம் தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தால் அதுவே போதும்.


அதற்கு இது பேச வேண்டிய நேரம் என்பதால் தான் பேசுகிறேன். தெரிந்தோ தெரியாமலோ வெளியில் போனால் அது ஒருவரை கொலை செய்வதற்கு சமம்.
கொஞ்சம் கொஞ்சமாக இந்த வைரஸ் பரவி வருகிறது அதனை கட்டுப்படுத்த வீட்டில் இருப்பதே சிறந்தது என்று பிரபல நடிகர் அர்ஜுன் கூறியுள்ளார்.