கொரோனா எனும் பயோ வெப்பனை திட்டமிட்டு பரப்பியது சீனா.. அமெரிக்காவில் வழக்கு..

கொரோனா எனும் பயோ வெப்பனை திட்டமிட்டு பரப்பியதாக சீனாவை, 20 டிரில்லியன் (இந்திய மதிப்பில் 20 லட்சம் கோடி) டாலர்களை நஷ்டஈடாக வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றத்தில், வாஷிங்டனைச் சேர்ந்த ப்ரீடம் வாட்ச் வழக்கறிஞர்கள் குழுவும், அமெரிக்க செனட்டர் லேரி கிளேமேனும் இணைந்து, சீனா மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்துதான் கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவ தொடங்கியது. சீனாவின் மிகப் பெரிய ‘வைரலாஜி’ ஆய்வு மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கும் என, உலக நாடுகள் சந்தேகம் தெரிவித்தன.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கொரோனாவை ‘சீன வைரைஸ்’ எனக் குறிப்பிட்டார். அதன்பின், இரு நாடுகளும் மாறி மாறி, தங்களது நாட்டில் பணியாற்றும் எதிரி நாட்டின் பத்திரிகையாளர்களை நாட்டை விட்டு வெளியேற்றின.

இந்நிலையில், அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாண நீதிமன்றத்தில், வாஷிங்டனைச் சேர்ந்த ப்ரீடம் வாட்ச் வழக்கறிஞர்கள் குழுவும், அமெரிக்க செனட்டர் லேரி கிளேமேனும் இணைந்து, சீனா மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

வழக்கு மனுவில், ”கொரோனா வைரஸ் ஒரு ‘பயோலாஜிக்கல் ஆயுதம்’. ஒரு மனிதரிடத்தில் இருந்து மற்றவருக்கு எளிதாக தொற்றும்படி அதை சீனா வடிவமைத்துள்ளனர். அந்த வைரசால், உலகில் 3,34,000 பேர் தாக்கப்பட்டுள்ளனர்; 17,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் மிகுந்த ஆபத்து நிறைந்தது. உலக பொதுச்சட்டத்தை மீறி இந்த வைரசை சீனா உருவாக்கி பரப்பியுள்ளது. அமெரிக்காவுக்கு 20 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை, சீனா நஷ்ட ஈடாக தர வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

மேலும், ‘சீன பிரதமர் உலகின் நண்பர் அல்ல. சீனாவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு வெற்றி பெற, உலக நாடுகள் துணை நிற்க வேண்டும்’ எனத் தனது டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.