உலக நாடுகளில் கொரானா பாதிப்பு, பெட்ரோலிய விலை வீழ்ச்சி, தொழில் வணிகத்துறைகளில் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு ஆகியவற்றால் கடந்த இரு வாரங்களாகப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. இதனால் தங்கம் விலையும் குறைந்தது.
நேற்றைய விலையிலிருந்து இன்று கிராமுக்கு 92 ரூபாயும் ,சவரனுக்கு 736 ரூபாய் குறைந்து, 22 கேரட் தங்கத்தின் இன்றைய விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ரூ.4,108 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.32,864 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.4,306 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.34,448 விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை கிராமுக்கு 41.70 காசுகளாகவும்,ரூ.41,700 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது.