பிரபலமான அமெரிக்க பாப் பாடகர் மற்றும், ஹாலிவுட் திரைப்பட நடிகர் ஆரோன். இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதியாக கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, எனக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தது. சளியும் இருந்தது. இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தேன்.
எனக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவமனையில் உறுதியாகியுள்ளது. இந்த விஷயத்தை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்பினேன். இப்போது நான் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன். நல்ல வேலையாக காய்ச்சல் மட்டும் இல்லை.
பெரும்பாலானோருக்கு தீவிர அறிகுறி இருப்பதை கண்டேன். இது மிகவும் ஆபத்தான வைரஸ். எனது வாசனை திறன் மற்றும் சுவைத்திறன் இலக்கப்பட்டுள்ளது. இது யாரையும் தாக்கும் வல்லமை கொண்டது. ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் அனைவரும் இருங்கள் என்று கூறியுள்ளார்.