பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் அயன் முகர்ஜியின் பிரம்மாஸ்திரத்தை ரன்பீர் கபூருடன் நடிக்கின்றார். மேலும் அவரது தந்தை மகேஷ் பட் மற்றும் ராஜமவுலியின் படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில், நடிகை ஆலியா பாட் தன்னுடைய சகோதரி உடன் ஸ்வாங்கி சுஜு குடியிருப்பில் தனிமையில் வசித்து வருகின்றார். இந்த நேரத்தில் தன்னுடைய பெற்றோரை மிகவும் மிஸ் பண்ணுவதாக அவர் தெரிவித்து இருக்கின்றார்.
அவரின் ஆல்பத்திலிருந்து தனது தந்தையுடன் இருக்கும் கருப்பு, வெள்ளை புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிர்ந்து, மிகவும் உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பகிர்ந்த ஆலியா பட் மறைமுகமாக ,” அனைவரும் வீட்டிலேயே இருங்கள். சொந்தங்களை மிஸ் பண்ணும் போது இது போன்று பழைய புகைப்படங்களை கண்டு மகிழுங்கள்.” என்று தெரிவிக்கின்றார்.
மேலும், செல்லப்பிராணிகளை அவர் தற்போதும் ஆசையாக கட்டி தழுவி விளையாடி வருகின்றார். இதற்கு பின்னணியில் செல்லப்பிராணிகள் வழியாக கொரோனா பரவாது என்ற ஆராய்ச்சியாளர்களின் முடிவை பிரதிபலிக்கும் செயல் என்று கூறப்படுகிறது.
View this post on Instagram
View this post on Instagram