கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் காமெடி நடிகர் சந்தானத்துடன், சேர்ந்து கதாநாயகனுக்கு இணையாக நடித்திருந்த நடிகர் சேதுராமன்(35) மாரடைப்பினால் மரணமடைந்தது ஒட்டுமொத்த சினிமா உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த மருத்துவரும் அவரது நண்பருமான அஷ்வின் விஜய், அவர் இல்லாமல் என் வாழ்க்கை நார்மலாக இருக்க போவதில்லை . அவர் மாரடைப்பு காரணமாக தான் உயிரிழந்தார்.கொரோனாவால் இறக்கவில்லை. தயவு செய்து இந்த நேரத்தில் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.