உங்கள் முகத்தை பேரழகியாக மாற்ற இந்த ஒன்று மட்டும் போதும்!

கேரட்டில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே. அதே போல் கேரட் சாப்பிடுவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஏனெனில் கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின், கரோட்டினாய்டு, ஆன் டி ஆக்சிடண்ட் எல்லாமே உள்ளுறுப்புகளுக்கு மட்டுமல்ல சரும அழகுக்கும் உதவுகிறது.

அதுமட்டுமின்றி கேரட்டில் ஆண்டிஆக்ஸிடண்ட் அதிகம் இருப்பதால் சரும பாதிப்புகள் எதுவாக இருந்தால் சரிசெய்துவிடும்.

அந்தவகையில் கேரட்டை வைத்து சரும அழகினை எப்படி அதிகரிக்கலாம் என இங்கு பார்ப்போம்.

  • கேரட்டை தோல் சீவி சிறிதளவு நீர் விட்டு மிக்ஸியில் மையக அரைத்து சாறு பிழிந்து கொள்ளவும். அதனுடன் முட்டையின் வெள்ளைகருவை கலந்து நன்றாக பீட் செய்து கூந்தலில் தடவி 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்துவந்தால் கூந்தலுக்கு வேண்டிய போஷாக்கு கிடைக்கும்.
  • கேரட் பாதிஅளவு இருந்தால் போதும் கேரட்டை விழுதாக மசித்து அதனுடன் சுத்தமான தேன் கலந்து இரண்டையும் நன்றாக குழைத்து கொள்ளவும். தேவையெனில் காய்ச்சாத பால் சிறிது விட்டு முகம், கழுத்து பகுதியில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், நிறம் உடனடியாக மறைவதை பார்க்கலாம்.
  • கேரட்- 1, பாசிப்பருப்பு – 5 டீஸ்பூன், இரண்டையும் பாதி நிலையில் வேகவைத்து மிக்ஸியில் அரைத்து அதனுடன் தயிர், பன்னீர், எலுமிச்சை சேர்த்து கலந்து முகத்துக்கும், கழுத்துக்கும் பேக் போட்டு நன்றாக காயும் வரை விட வேண்டும். முகத்தை இறுக்கி பிடிக்கும் அளவு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி எடுத்தால் முகம் பளிச் என மாறும்.
  • கேரட்டை அரைத்து சாறு பிழிந்து வடிகட்டி அதனுடன் சமளவு பன்னீர், ஆலோவேரா சாறு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் வைத்துகொள்ளுங்கள். முகம் சோர்வாக இருக்கும் போதெல்லாம் ஸ்ப்ரேவை முகத்தில் அடித்து பஞ்சால் துடைத்து எடுத்தால் முகம் புத்துணர்ச்சியாய் இருக்கும்.
  • கண்களுக்கு கீழ் கருவளையம் இருப்பவர்கள் இரவு படுக்கும் போது இந்த நீரை பஞ்சில் நனைத்து கண்களுக்கு கீழ் தடவி இலேசாக மசாஜ் செய்தாலே கருவளையம் நீங்கும். கருமை நிறம் மறையும்.
  • சருமம் ஜொலிஜொலிப்புடன் இருக்க தினம் ஒரு கேரட் சாறு குடித்தால் கூட போதும்.