நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவுகள் மட்டுமின்றி சில உடற்பயிற்சிகளும் உதவி செய்கின்றன.
அந்தவகையில் வீட்டில் இருந்தவாறே கீழே கொடுக்கப்பட்ட உடற்பயிற்சிகளை 20 – 25 நிமிடங்கள் செய்தால் போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். அதோடு நேர்மறை எண்ணங்களை தூண்டும் எண்டோர்ஃபின் ஹார்மோன் சுரக்கும்.
தற்போது அந்த உடற்பயிற்சிகள் என்னென்ன? அதனை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.
ஸ்குவாட் & சைட் லெக் லிஃப்ட் ( squat side leg lift exercise)
ஸ்குவாட் செய்வதால் தசைநார்கள் உறுதியாகும். இடுப்பு, உடல் இலகுத் தன்மை அதிகரிக்கும். வலது கால் தசைகள் வலுபெறும்.
ரிவர்ஸ் லஞ் ( reverse lunge exercise)
தொடை மற்றும் பின்புறம் அழுத்தம் கொடுக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பைக் கறைக்க உதவும்.
சிட் அப் ( sit up exercise)
வயிற்று தசைகள் இலகுவாகும். ஒட்டுமொத்த உடல் தசைகளும் தூண்டப்பட்டு ஆற்றல் பெறும். தேவையற்ற கொழுப்பு கறையும்.
புஷ் அப் ( Push Up)
கை தசைகள், தோள்பட்டைகளை உறுதியாக்கும். இது உடலின் மேல் பகுதி முழுவதையும் வலுப்பெறச் செய்யும்.
பிளாக்ஸ் ( blocks exercises)
இது முதுகுவலியை குணமாக்கும். உடலமைப்பை சீராக்கும். பாதங்களின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
மவுண்டெய்ன் க்ளிம்பர்ஸ் (mountain climbers exercise)
இதயத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதயத்திற்கான இரத்த ஓட்டம் வேகமாகக் கிடைக்கும்.