நமது உறக்கத்தில் ஏற்படும் கனவுகள் பல நமக்கு பல விதமான அனுபவங்களை ஏற்படுத்தும். சில கனவுகள் சிறிது வருடங்களுக்கு பின்னர் அப்படியே நடந்தும் இருக்கும். இவ்வாறாக நமக்கு பல கனவுகள் ஏற்படும் நிலையில், பாலியல் ரீதியான கனவுகள் ஏற்பட என்னென்ன காரணம் என்பதை இனி காணலாம்.
காதலை வெளிப்படுத்துவது போல கனவு வரும் பட்சத்தில், நமது காரியத்தில் வெற்றியடைய போவது என்பது அர்த்தமாக இருக்கும். தம்பதிகள் தங்களின் துணையுடன் தாம்பத்தியம் தொடர்பான தகவலை பேசுவது போல கனவு வந்தால், தம்பதிகளின் தாம்பத்தியம் முற்றுப்புள்ளியை அடையும்.
கருத்தரிப்பது போல கனவு வரும் பட்சத்தில், நமது வாழ்க்கை அல்லது நமது பாச பந்தம் நல்ல வகையில் வளர்ச்சியடையும் என்று அர்த்தம். பழக்கம் இல்லாத நபருடன் தாம்பத்தியம் மேற்கொள்வது போல கனவு வரும் பட்சத்தில், வாழ்க்கையில் ஏற்படும் புதிய வாய்ப்பை பெறுதலுக்கான அறிகுறி அல்லது வாழ்வின் மாற்றத்தை குறிக்கும்.
ஓரினசேர்க்கையில் ஈடுபடுவது போல கனவு வந்தால், இருவருடைய நட்பின் பாதுகாப்பின்மை மற்றும் அவரது திறமையின் மீதுள்ள பொறாமையை குறிக்கும். பெண்களின் வாய் ஓரத்தில் முத்தம் இடுவது போல கனவு வந்தால், தங்களை நோக்கி சண்டை வருகிறது என்று அர்த்தம்.