திப்பிலி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது. மேலும் திப்பிலியில் தயாரிக்கப்படும் திப்பிலி இரசாயன மருந்து ஆஸ்துமா, மூக்கடைப்பு, சைனஸ் தலைவலிக்கு சிறந்த மருந்தாகும். இதனை 3 கிராம் வீதம் தினந்தோறும் இரு வேளைகளிலும் சாப்பிட்டு வரவேண்டும்.
திப்பிலி உடலில் ஏற்படும் தசைவலி, வயிற்றுப்போக்கு, தொழுநோய் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. முக்கியமாக இருமல், கபம், சுவாசக்குழாய் அடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
திப்பிலிப்பொடி மற்றும் கடுக்காய்ப்பொடி சம அளவு எடுத்து தேன்விட்டு குழைத்து அரை டீஸ்பு+ன் அளவு தினந்தோறும் இருவேளை சாப்பிட்டு வந்தால் இளைப்பு நோய் நீங்கும்.
உடல் வலி, முதுகுவலி மற்றும் வாத நோய்களுக்கு கண்டந்திப்பிலி 5 கிராம் அளவு எடுத்து அரைத்து பாலில் கலந்து குடிக்கவேண்டும்.
திப்பிலிப் பொடி 10 கிராம் அளவு எடுத்து அதில் அரை மி.லி. பசுவின் பால் விட்டு காய்ச்சி இரு வேளை குடித்துவர இருமல் மற்றும் வாய்வுப் பிரச்சனைகள் குணமாகும்.
திப்பிலியைத் தூள் செய்து அரை தேக்கரண்டியளவு எடுத்து தேன் கலந்து இரு வேளையாக 1 மாதம் சாப்பிட்டு வர தேமல் குணமாகும்.
மூட்டு வலிக்கு திப்பிலிப் பொடி இரு கிராம் எடுத்து 100 மி.லி. பாலில் கலந்து 30 நாட்கள் தினமும் பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.
திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு ஆகியவற்றை சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து மூன்று வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.
திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து இரு வேளை சாப்பிட்டு வர இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை போன்றப் பிரச்சனைகள் குணமாகும். இரைப்பை மற்றும் ஈரல் வலுப்பெறும்.
சிறுவர்களுக்கு ஆஸ்துமாவால் உண்டாகும் மூச்சிரைப்பு மற்றும் ஒவ்வாமை காரணமாக உண்டாகும் தொடர் தும்மலுக்கு இரு கிராம் திப்பிலிப் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வெதுவெதுப்பான நீர் அருந்தினால் விரைவில் குணமாகும்.