கொரோனாவால் இனி ஒரு உயிர் கூட போகக்கூடாது! நடிகர் யோகி பாபு…..

உக்கிரமடைந்துள்ள கொரோனாவில் இருந்து பாதுகாக்க இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் உத்தரவை மீறி வருபவர்களுக்கு பொலிசார் நூதன தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் அனைவரும் பத்திரமாக வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி தெரிவித்து வருகின்றனர்.

பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு மோசமானது, இனிமேல் ஒரு உயிர் கூட கொரோனாவால் போகக்கூடாது.

கடவுள் நம்மை காப்பாற்றுவார், தைரியமாக இருங்கள் என உருக்கத்துடன் பேசியுள்ளார்.

இவரது திருமண வரவேற்பு நிகழ்வு வரும் வாரத்தில் நடக்கவிருந்த நிலையில், தள்ளி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.