உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது. அது போல் பலியானோரின் எண்ணிக்கை 33,956 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகளவில் இது வரை 7,22,196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 1,51,766 பேர் குணமடைந்தனர். அது போல் உலகளவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 33,976 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் ஒரே நாளில் 18,276 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,41,854 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அமெரிக்காவில் கொரோனாவுக்கு 255 பேர் இறந்துள்ளனர்
இதனால் அமெரிக்காவில் பலியானோரின் எண்ணிக்கை 2,475 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் உலகளவில் 2000 பேர் இறந்துள்ளனர். இத்தாலியில் ஒரே நாளில் 756 பேர் பலியானதால் அங்கு பலி எண்ணிக்கை 10,778 ஆக உயர்ந்தது. ஸ்பெயினில் 6,606 பேர் பலியாகிவிட்டனர். அது போல் ஈரானில் 2,640 பேரும், பிரான்சில் 2,314 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் ஆரம்பித்த இந்த கொரோனா ஒட்டுமொத்த உலகத்திற்கும் போராக மாறிவருகின்றது. அதிலும் அமெரிக்காவின் நிலைமை பயங்கர மோசமான நிலையில் காணப்படுவது கவலையை அளிக்கின்றது.