நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 809 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (29) காலை 6 மணி முதல் இன்று (30) காலை ஆறு மணி வரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 166 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன்படி கடந்த 20ம் திகதி முதல் இன்று வரையான காலப் பகுதியில், 6,850 பேர் கைது செய்யப்பட்டதுடன், 1,643 வாகனங்களும் கைப்பற்றபட்டுள்ளன.