உடல் நலப்பிரச்சனைகளில் தற்போது முதன்மையானதாக இருப்பது சர்க்கரை நோய் தான்.
தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய், சர்க்கரை நோய்.
இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் இதிலிருந்து எளிதில் விடுபடலாம்.
அந்தவகையில் சக்கரை நோயை கட்டுக்குள் வைக்க முருங்கை இலையில் தயாரிக்கப்படும் டீ பெரிதும் உதவி புரிகின்றது. தற்போது இந்த அற்புத டீயை எப்படி தயாரிக்கலாம் என இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- முருங்கைக்கீரை பொடி – ஒரு தேக்கரண்டி
- கிரீன் டீ பொடி – ஒரு தேக்கரண்டி
- புதினா இலைகள் – 4
- எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
- வெல்லம் – 1 தேக்கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் முருங்கைக்கீரை பொடி, கிரீன் டீ பொடி, புதினா இலை, வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
பின்னர் இந்த டீயை வடிகட்டி எலுமிச்சை சாறு கலந்து பருகவும். சூப்பரான முருங்கை டீ ரெடி.
குறிப்பு
- டயட்டில் இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி குடிக்கலாம்.
- கர்ப்பிணிகள் இதனை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
- நீரிழிவு, இரத்த அழுத்தம், தைராய்டு போன்ற உடல் உபாதைகளுக்கு மருந்துகளை சாப்பிட்டு வந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி குடித்து வரலாம்.