உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொடர்பில் மக்கள் தகவல்களை அறிந்துகொள்வதற்கான வசதியினை ஏற்படுத்தவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்காக COVID-19 இணைத்தளம் மற்றும் அப்பிளிக்கேஷன் என்பவற்றினை உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
நோய் கட்டுப்பாட்டு மையங்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இவை வடிவமைக்கப்படவுள்ளன.
இதேவேளை கொரோனா வைரஸ் தொடர்பில் மக்களும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை பதிவேற்றம் செய்து விடைகளைப் பெற்றுக்கொள்ளும் வசதியும் இத்தளம் மற்றும் அப்பிளிக்கேஷனில் தரப்படவுள்ளது.
தவிர சமூக தனிமைப்படுத்தல் தொடர்பான வழிகாட்டல், நோய் அறிகுறிகளை கண்காணித்தல் உட்பட மேலும் பல வசதிகள் உள்ளடக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.