iOS சாதனங்களில் ஒரே நேரத்தில் 32 நபர்களுடன் வீடியோ சட் செய்வது எப்படி?

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் பலர் வீடுகளில் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் குடும்பத்தவர்களுடன், நண்பர்களுடன் கதைத்து மகிழ முடியாத நிலை காணப்படுகின்றது.

இக் குறையைப் போக்குவதற்கு ஆப்பிளின் FaceTime அப்பிளிக்கேஷன் பெரிதும் உதவியாக இருக்கின்றது.

இதன் உதவியுடன் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 32 பேர் வரையில் அரட்டையடிக்க முடியும்.

எனினும் FaceTime ஊடாக வீடியோ சட் செய்வதற்கு iPhone 6S அல்லது அதன் பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்கள் இருக்க வேண்டும்.

மாறாக iPad Pro அல்லது அதன் பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட ஐபேட், iPad Air 2, iPad Mini 4 என்பவற்றினைப் பயன்படுத்த முடியும்.

அத்துடன் இச் சாதனங்களில் iOS 12.1 இற்கு பின்னரான இயங்குதளப் பதிப்பு நிறுவப்பட்டிருக்கவேண்டியது அவசியம் ஆகும்.

இப்போது குழு அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கு ஆப்பிள் சாதனத்தில் Settings பகுதிக்கு சென்று FaceTime என்பதை Turn ON செய்து திறக்கவும்.

தொடர்ந்து அப்பிளிக்கேஷனின் வலது மேல் மூலையில் காணப்படும் “+” அடையாளத்தினை சொடுக்கி நண்பர்கள் அல்லது குடும்பத்தவர்களை சேர்த்துக்கொள்ளவும்.

அதன் பின்னர் Audio/Video என்தை கிளிக் செய்து அழைப்பினை ஏற்படுத்தவும்.