உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட் கைப்பேசி சந்தைகளில் பல ஆயிரம் கோடிகள் இழப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்

உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட் கைப்பேசி சந்தைகளில் ஒன்றாக இந்தியாவும் திகழ்கின்றது.

எனினும் அண்மையில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதனை தொடர்ந்து ஸ்மார்ட் கைப்பேசி விற்பனை உலக அளவில் சந்தித்துள்ளது.

இது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.

இக் காலப்பகுதியில் சுமார் 15,000 கோடி இந்திய ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மிக முக்கியமான காரணமாக விளங்குவது இந்தியா LockDown செய்யப்பட்டிருக்கின்றமையாகும்.

இதனால் கைப்பேசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலைமையும் காணப்படுகின்றது.

தொடர்ந்து 21 நாட்களுக்கு இந்நிலைமை நீடிக்கும் என்பதால் மேலும் பல ஆயிரம் கோடிகளை ஸ்மார்ட் கைப்பேசி சந்தை இழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.