தற்போதைய கொரோனா வைரஸ் அச்சநிலையைப் பயன்படுத்தி பல்வேறு போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இதனைக் கருத்தில்கொண்ட உலக சுகாதார நிறுவனம் இதற்காக விசேட மொபைல் அப்பிளிக்கேஷன் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
இதன் மூலம் தற்போது உலகளவில் இடம்பெறும் கொரோனா வைரஸ் தொடர்பான உண்மை மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
குறித்த அப்பிளிக்கேஷன் ஆனது WHO MyHealth எனும் பெயருடன் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களில் இதனைப் பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்.
மேலும் இன்றைய தினம் அதாவது மார்ச் 30 ஆம் திகதி குறித்த அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்படும் எனவும் நம்பப்படுகின்றது.