சீனாவில் தொடங்கி இந்த உலகத்தையே கொரோனா வைரஸ் சீரழித்து வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சமாக உயர்ந்துள்ளது.
மேலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் இக்கட்டான சூழலிலேயே உள்ளது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த காமெடி நடிகர் Ken Shimura கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த மார்ச் 23 ல் கொரோனா இருப்பது அவருக்கு சோதனைகள் மூலம் உறுதிசெய்யப்பட்ட நிலையில் ஜப்பான் தலைநகரான டோக்கியோவின் Shinjiko பகுதியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது காலமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அவருக்கு வயது 70. Ken Shimura 1970 முதல் சினிமா, தொலைக்காட்சிகளில் அவர் காமெடி நடிகராக வலம் வந்தார்.
அவரின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.