கொரோனாவால் 12 வயது சிறுமி பரிதாப பலி..!!

உலகளவில் பெரும் பிரச்சனையாக கரோனா வைரஸ் பிரச்சனை இருந்து வருகிறது. மருத்துவத்தில் சிறப்பாக விளங்கும் மேலை நாடுகள் கூட கரோனாவின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் விழிபிதுங்கி வருகிறது.

சீன நாட்டில் உள்ள யூகான் நகரினை மையமாக வைத்து கரோனா வைரஸ் பரவியது. இந்த வைரஸ் சீனாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு, சமூக பரவல் மூலமாக உலக நாடுகளிலும் பரவியுள்ளது. சுமார் 199 நாடுகளுக்கு சமூக பரவிலின் மூலமாக பரவியுள்ளது.

இதனால் சீன நாட்டினை போல பிற நாடுகளும் பெரும் பதற்றத்திற்கு உள்ளான நிலையில், கரோனா வைரஸ் உலகளவில் 796,397 பேரை பாதித்துள்ளது. இதில் சிகிச்சை பலனின்றி 38,576 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 169,218 சிகிச்சை முடிந்து பூரண நலன் பெற்று இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர். இந்த நோயால் அதிகளவில் வயதான நபர்கள் உயிரிழந்து வந்தது தெரியவந்துள்ளது.

இந்த நோயின் தாக்கமானது அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் ஐரோப்பிய ஐக்கிய நாடுகள், பிரான்ஸ் நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாடு துவக்கத்தில் பெரும் இழப்பை சந்தித்தது. இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகள் இறந்த நபர்களின் உடலை அடக்கம் செய்ய இயலாது தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஐரோப்பிய நாட்டில் உள்ள பெல்ஜியம் நகரில் கரோனா வைரஸ் 12 வயது சிறுமிக்கு உறுதி செய்யப்பட்டது. இந்த சிறுமி அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அந்த நிலையில், இவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.