5G ஐபோன் தொடர்பில் வெளியான புதிய தகவல்

ஆப்பிள் நிறுவனம் இவ் வருடம் iPhone 12 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்ய வேண்டும்.

எனினும் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக இக் கைப்பேசி அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்படலாம் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக ஓரிரு மாதங்கள் கழித்தே குறித்த கைப்பேசி அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது வெளியான தகவல்களின்படி குறித்த கைப்பேசியினை வடிவமைக்கும் பணிகூட இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் ஆப்பிள் நிறுவனம் நான்கு வகையான iPhone 12 கைப்பேசிகளை அறிமுகம் செய்ய எதிர்பார்த்திருந்ததுடன், முதன் முறையாக 5G கைப்பேசியினையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.