தமிழில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.
இதன்பின் ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இவர் 2011ஆம் ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தையும் உண்டு.
ஆனால் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சில வருடங்களுக்கு முன் இருவரும் விவாகரத்து பெற்று கொண்டனர்.
இதன்பின் நடிகர் விஷ்ணு விளையாட்டு வீராங்கனை Gutta Jwala என்பவரை காதலித்து வருவதாக தெரியவந்தது.
இந்நிலையில் தற்போது தனது காதலர் விஷுணுவை திருமணம் செய்வதை பற்றி பேசியுள்ளார். ஆம் அதில் அவர் பேசியது ” எனக்கும் விஷ்ணுவிற்கும் நடக்கும் திருமணத்தை பற்றி சரியா சமயத்தில் தகவல் வெளிவரும்” என தெரிவித்துள்ளார்.