புதிதாக நியூஸ் சேனலை ஆரம்பித்த பிக்பாஸ் சேரன்!

பிக் பாஸ் சேரன் புதிதாக யூ-டியூபில் சேனல் ஒன்றினை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த மகிழ்ச்சியான தகவலை அவரின் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

நண்பர்களே வணக்கம். புதிதாக நான் யூ-டியூபில் சேனல் ஒன்று உருவாக்கி இருக்கிறேன்.


அது அந்த சேனலின் பெயர் வால் போஸ்டர். இதற்கு உங்களுடைய ஆதரவு எனக்கு தேவை.

இப்போது இது நியூஸ் சேனல் ஆக தான் துவங்குகிறது. மேலும், இது தொடர்ந்து பன்முகத் தன்மை கொண்டதாக மாறும்.

வால் போஸ்டர் சேனலை பார்க்க அதன் லிங்க் bio வில் இணைந்திருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டும் இல்லை சேரனின் இந்த புதிய முயற்சியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.