அப்பாவையே உறித்துவைத்திருக்கும் மாதவன் மகனா இது..

பாலிவுட்டில் நடிகராக அறிமுகமாகி அதன்பின் தமிழ் சினிமாவில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அலைப்பாயுதே படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் மாதவன். அப்படத்தின் மூலம் ஜாக்லேட் பாய் என்று பல இளம்பெண்களால் கவரப்பட்டார்.

அதன்பின் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகர்கள் என்ற இடத்தினை பெற்றார். இந்தி, ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்த மாதவன் சரிதா பெர்ஜி என்பவரை 1999ல் திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் இந்திய சினிமாவில் நடித்தும் சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார். அதன்பின் சில காரணங்களால் தமிழ் படங்களில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார்.

கடந்த 2016ல் இறுதி சுற்று என்ற படத்தில் நடித்து தமிழில் ரீஎண்ட்ரி கொடுத்தார். அதன்பின் விகரம் வேதா ஆகிய படங்களில் நடித்து மீண்டும் பழைய இடத்தினை பிடித்தார்.

இந்நிலையில் சில படங்களில் நடித்து வரும் மாதவன், கொரானா பாதிப்பால் தற்போது படப்பிடிப்பு இல்லாமல் விட்டிலேயே குடும்பத்துடன் இருந்து வருகிறார். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மாதவன், சில தினங்களுக்கு முன் அவரது மகன் விதாண்ட் மாதவனின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சிறுவனாக இருந்த அவரது மகன் வளர்ந்து மாதவனி அழகை உறித்து வைத்து அழகாக இருக்கிறார் என்று சமுகவலைத்தளத்தில் அவரது வீடியோ ரசிகர்களிடையே பரவி வருகிறது.