நடிகை நமீதா நள்ளிரவில் பைக்கில் சென்று நாய்களுக்கு உணவு வைத்துள்ளார்.
இது குறித்த காணொளிகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
தனது வீட்டுக்கு வெளியில் இருக்கும் 40 தெரு நாய்களுக்கு உணவு அளித்து உள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தெருவில் இருக்கும் வாயில்லா ஜீவன்களுக்கு கொஞ்சம் உணவும், தண்ணீரும் வீட்டுக்கு வெளியில் அனைவரும் வைக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் வைத்து உள்ளார்.
நமீதாவின் இந்த உதவியை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.