சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி வருகிறது. இதனால் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.
இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு பிஎஸ்என்எல் ஏர்டெல் மற்றும் ஓட போன் ஆகிய நிறுவனங்கள் சலுகைகள் வழங்கி வந்தது. இது குறித்து ஏற்கனவே பல தகவல் வந்த நிலையில் தற்போது ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிரடி சலுகை வழங்கியுள்ளது.
அதன் மூலம் இலவச வாய்ஸ் கால் எஸ்எம்எஸ் என ஏப்ரல் 14ஆம் தேதி வரை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் ஜியோ போன் பயனாளர்கள் இன் வேர்ல்டு காலாவதியான பிறகும் இன்கமிங் வாய்ஸ் கால்களை பெறுவார்கள் என்று அறிவித்துள்ளார்.