தமிழ் சினிமாவில் நடிக்க வந்து மிக விரைவில் பிரபல நடிகையாக மாறியவர் நடிகை அமலா பால். இவர் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இரண்டு வருடங்களிலேயே கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.
அதன் பின்னர் இயக்குனர் விஜய் மறுமணம் செய்து கொண்டார். அமலாபால் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அமலா பால் பாலிவுட் பாடகர் பவிந்தர் சிங் காதலித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியது. இதனை வெளியுலகத்திற்கு தெரிய வரும் வகையில் சில தினங்களுக்கு முன்பாக பவிந்தர் அமலாபாலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்.
தற்போது இருவரும் பாரம்பரிய முறைப்படி ரகசியமாக திருமணம் செய்து கொண்டு உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. இந்த திருமணத்தில் இருவீட்டாருக்கும் நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டதாக தகவல் வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து பவிந்தர் சிங் அவரது திருமண புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். ஆனால் சிறிது நேரத்திலேயே அதனை நீக்கி விட்டார். வழக்கமாக எப்போதும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை அப்டேட் ஆக வெளியிட்டு வரும் அமலாபால் தனது மறுமண புகைப்படங்களை மட்டும் வெளியிடாமலே உள்ளார்.
இந்த நிலையில், நடிகை ஸ்ரீ ரெட்டி அவரது முகநூல் பக்கத்தில் அமல பாலின் இரண்டாவது திருமணம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “அமலாபால் உங்களது பஞ்சாபி கணவர் உங்களை சிறப்பாக பார்த்துக் கொள்வார். பஞ்சாபி மனிதர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது” இன்று அவர் பதிவிட்டிருந்தார்.