தந்தையுடன் கள்ளக்காதல் கொண்ட பெண்ணை போட்டுத்தள்ளிய சிறுவன்..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை அருகேயுள்ள கிராமத்தை சார்ந்த 45 வயதாகும் விவசாயிக்கு, திருமணம் முடிந்து 17 வயதுடைய மகன் மற்றும் 14 வயதுடைய மகள் இருக்கிறார்.

இந்த நிலையில், சிறுவனின் தந்தைக்கும், இப்பகுதியை சார்ந்த திருமணம் முடிந்த 47 வயதுடைய பெண்மணிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது பின்னாளில் இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்த விஷயம் சிறுவனிற்கு தெரியவரவே, சிறுவன் தந்தையின் மீதும், தந்தையுடைய கள்ளகாதலியின் மீதும் கடுமையான ஆத்திரத்தில் இருந்துள்ளான். சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் தந்தையின் கள்ளக்காதலி இல்லத்திற்கு சென்றுள்ளான்.

பின்னர் தந்தையின் கள்ளகாதலியிடம் இது குறித்த உறவை கைவிடக்கூறி கேட்ட நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் பெண்ணை அங்கிருந்த கட்டையால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளான்.

படுகாயமடைந்து இருந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீது அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யவே, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இரண்டு சிறுவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.