இருபது ஓவர் மற்றும் 50 ஓவர் போட்டிகளில் ஆட்டம் தடைபட்டால் இலக்கை மாற்றி அமைக்கும் டக்வொர்த் லூயிஸ் விதி உருவாக்கிய டோனி லூயிஸ் சற்றுமுன் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டோனி லூயிஸ் இங்கிலாந்து அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளார் பின் பத்திரிக்கையாளராக பணியாற்றினார். 81 வயதான அவர் 1938 ஆம் ஆண்டு பிறந்தவர்.
அவர் ஃபிராங்க் டக்வொர்த்துடன் இணைந்து டக்வொர்த் / லூயிஸ் முறையை உருவாக்கினார்கள். நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட ஆட்டத்தில் மழையினால் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால ஆட்டம் தடைபட்டால் இலக்கினை மாற்றியமைக்கும் விதியினை உருவாக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விதிமுறை தான் தற்போது வரை ஆட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Just heard the news about the sad demise of Tony Lewis, the one who devised the Duckworth/Lewis method, with Frank Duckworth, of resetting targets in interrupted limited-over cricket matches.#RIP
— Mohandas Menon (@mohanstatsman) April 1, 2020