2 லட்சம் பேர் வரை உயிரிழக்க வாய்ப்பு.. வாழ்வா சாவா போராட்டத்தில் அமெரிக்கா..

கொரோனா வைரஸால் அமெரிக்காவில் மேலும், சுமார் 2 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பிருப்பதாக வெள்ளை மாளிகையிலிருந்து அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் ஆனது உலகமெங்கும் பரவி வருகிறது. முதலில் சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது அமெரிக்காவில் கொரோனவை கட்டுபடுத்தமுடியாமல் கடுமையாக திணறி வருகிறது.

இந்த நிலையில் அந்த நாட்டின் நோய் பரவலின் வேகம் தீவிரமானது. ஒவ்வொரு நாளும் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு கொண்டிருந்தனர்.

ஒரே, நாளில் 865 பேர் உயிரிழந்தனர். இது அந்த நாட்டிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நியூயார்க் நகரம் 76 ஆயிரம் நோயாளிகளுடன் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

இதுவரை 4050 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது அந்த நாட்டில்பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.

இதனால், இனிவரும் நாட்களில் சமூக விலகளை முழுமையாக கடைப்பிடித்தாலும், அந்த நாட்டில் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கக் கூடும் என அந்த நாட்டின் தேசிய அலர்ஜி மற்றும் தொற்று நோய் இயக்குனர் கவலை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு அடுத்து வரும் இரண்டு வாரங்களும் வலிமிகுந்த வாரமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது வாழ்வா சாவா பிரச்சினை என்று உருக்கமாகக் கேட்டுக் கொண்ட அவர், சமூக விலகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனை அடுத்து நாடு முழுவதும் தற்காலிக மருத்துவமனை உருவாக்கப்பட்டு வருகிறது மக்களும் வீடுகளில் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.