அமெரிக்காவில் பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை கொரோனாவால் பலியான நிலையில் அந்த கொடிய வைரஸ் மூலம் ஏற்பட்ட இளம் வயது உயிரிழப்பு இது என தெரியவந்துள்ளது.
அந்நாட்டில் இதுவரை 2 லட்சத்து 12 ஆயிரத்து 980 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. அவர்களில் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 416 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 805 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5110 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கனக்டிகட் மாநிலம் ஹார்ட்போட் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 6 வாரங்களே நிரம்பிய குழந்தை இருந்தது. அந்த குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று வெளியான பரிசோதனையின் முடிவில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 6 வாரங்களேயான இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த தகவலை அம்மாநில கவர்னர் நெட் லமொண்ட் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே கொரோனாவால் உயிரிழந்த மிக இளம் வயது குழந்தை இது தான் என கருதப்படுகிறது.