“வெட்டி வேரு வாசம்“ என்ற பாடலில் கூட வெட்டிவேரின் வாசத்தை பெருமைப்படுத்தி சொல்லியிருப்பார்கள். வெட்டி வேர் வாசனைமட்டும் தராது. பல வித நோய்களை குணப்படும் தன்மை வெட்டிவேருக்கு உண்டு.
மேல் பகுதியில் உள்ள புற்களையும் அடிப் பகுதியில் உள்ள வேர்களையும் வெட்டிய பின், நடுப்பகுதியான தண்டை மட்டும் மண்ணில் ஊன்றினாலே போதும்;
மீண்டும் வெட்டிவேர் செடி தானாக வளர்ந்துவிடும். இப்படி வெட்டி எடுத்து விளைவிப்பதால் இதற்கு ‘வெட்டி வேர்’ என்று அழைக்கப்பட்டது.பாய், காலணி, தலைக்குத் தொப்பி செய்ய வெட்டி வேர் பயன்படுகிறது. குரு வேர், விழல் வேர், விரணம், இரு வேலி எனவெட்டிவேருக்கு பல பெயர்கள் உண்டு. புற்கள் வகையைச் சேர்ந்த இந்தத் தாவரத்தின் வேர்கள் மட்டுமே மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது.
வெட்டிவேரின் மருத்துவ குணங்கள்
- வெட்டி வேரினை எலுமிச்சை வேர் பலர் கூறுவார்கள். நீர் கடுப்பு, தோல் எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடி செய்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
- வெட்டிவேரை ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சுடும். நாவறட்சி, தாகம், காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களுக்கு வெட்டிவேர் குணமளிக்கும்.
- வெட்டிவேர் எண்ணெய்யை கொண்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது தடவி வந்தால் அவை சீக்கிரம் மறைந்துவிடும். இந்த எண்ணெய்யை தேய்த்து குளிக்கலாம்.
- சீயக்காய்க்குப் பதில் வெட்டிவேரின் பவுடரை பயன்படுத்தினால் நன்கு முடி வளரும். முகத்தில் எண்ணெய் வழியாது. முகம் கூடுதல் அழகுடன் காணப்படும்.
- வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அரைத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால் வெயில் காலத்தில் உண்டாகும் அதிக வியர்வை மற்றும் அரிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
- தீக்காயங்களுக்கு வெட்டிவேரை அரைத்து பூசினால் காயங்கள் விரைவில் குணமாகும். கால் எரிச்சல், கால் வலி போன்றவற்றிற்கு வெட்டிவேர் சுகமளிக்கும்.
- சுத்தம் செய்த உலர்ந்த வெட்டிவேரையும் பெருஞ்சீரகத்தையும் சம அளவு எடுத்து சூடாக்கி ஒரு ஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து உட்கொண்டு வந்தால், வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நீர் எரிச்சல், வயிற்றுக் கடுப்பு போன்றவை குணமாகும்.
- பொம்மைகள், செருப்புகள், மாலைகள், கால்மிதிகள், படுக்கை விரிப்புகள், வாசனை திரவியங்கள், சோப்புகள் என்று 60-க்கும் மேற்பட்ட பல பொருட்கள் வெட்டி வேர் மூலம் தயாரிக்கப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் கழிவுநீரில் உள்ள நச்சு உலோகங்களை நீக்கி நல்ல நீராக மாற்றும் தன்மை வெட்டிவேருக்கு உண்டு.
- வெட்டி வேரை சிறு சிறு துண்டுகளாக்கி, அதனுடன் கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றையும் முதல் நாள் இரவே சூடுதண்ணீரில் ஊறவைத்து விட வேண்டும். மறுநாள் அதை அரைத்து விழுதை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் மிக விரைவில் காணாமல் போய்விடும். இருந்த வடுவே தெரியாமல் அழிந்து விடும்.