வைரஸ் கண்காணிப்பு அப்பிளிக்கேஷனுக்கு ஏற்பட்ட மவுசு

உலகளவில் அதிவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொடர்பில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக தமக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதான என சுயபரிசோதனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இதற்காக சில மொபைல் அப்பிளிக்கேஷன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இஸ்ரேலில் சுமார் 1.5 மில்லியன் மக்கள் இவ்வாறான அப்பிளிக்கேஷனை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்திலிருந்தே மக்கள் இதனை அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

HaMagen எனும் குறித்த அப்பிளிக்கேஷனை ஜேர்மனி, இத்தாலி, பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் சிலி போன்ற நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.