கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பதா? புதைப்பதா?

எதிர்காலத்தில் கொரோனா வைரஸால் முஸ்லிம் மக்களில் எவராவது உயிரிழக்க நேரிட்டால் அவர்களது சடலங்களை புதைப்பதா அல்லது எரிப்பதா என்ற விடயத்திற்கு தீர்வு காண்பதற்காக குழுவொன்றை அமைக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌஸி இந்த தகவலை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் அனைத்து கட்சிகளினதும் தலைவர்களை பிரதமர் இன்று முற்பகல் சந்தித்தார்.

இதன்போது, நீர்கொழும்பு மற்றும் மருதானையில் கொரோனா வைரஸிற்கு பலியாகிய இரண்டு முஸ்லிம் நபர்களின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டமை குறித்து இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்த முஸ்லிம் தலைவர்கள் பிரதமரிடம் விசனம் வெளியிட்டனர்.

இதற்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதை கூறியுள்ளார்.

இந்த விவகாரத்திற்கு தீர்வுகாண குழுவொன்றை அமைக்கவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.