சீனா செய்த மோசமான வேலை! கெட்டவார்த்தையில் திட்டிய நடிகை!

கொரோனா வைரஸ் நோய் தொற்று விசயத்தில் தற்போது பல நாடுகளுக்கும் சீனா நடவடிக்கையின் மீது கடும் அதிருப்தி எழுந்துள்ளது. சீனாவுக்குள் அதிகம் இந்நோய் பரவுவதற்கு முன்பாக உலகளவில் பெரிய தாக்கத்தையும் மரணத்தையும் ஏற்படுத்திவிட்டது.

இந்நிலையில் சீனா தாங்கள் மீண்டு வருவதாகவும், தொழில் நிறுவனம்செயல்பட தொடங்கிவிட்டதாகவும், விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பவுள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் நோய் பரவுவதற்கு காரணமாக இருந்ததாக சொல்லப்பட்ட சீனாவின் வுஹான் இறைச்சி சந்தையும் மீண்டும் திறந்திருப்பது மற்ற நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வைரஸ் இன்னும் முழுமையாக ஒழிக்கப்படாத நிலையில் அச்சந்தையில் வௌவால், எலி, பூனை, நாய், முயல், கரப்பான்பூச்சி, நண்டு என அனைத்தும் விற்கப்படுகிறது. இதனால் அனைவரும் கோபத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை ஸ்ரத்தா தாஸ் கெட்ட வார்த்தையில் சீனாவின் நடவடிக்கைகளை திட்டியுள்ளார்.