பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்டவர் நடிகை வனிதா. இப்போது அனைவருக்கும் அந்நிகழ்ச்சியின் எபிசோடுகள் மனதில் ஓடும் தானே. இருக்காதா பின்னே.
நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் போட்டியாளர்கள் மட்டுமல்ல ரசிகர்களுக்கும் டான் போலவே வனிதா தெரிந்தார். அவரை செயல்பாடுகளை அந்நேரத்தில் திட்டாதவர்கள் இல்லை. இருப்பினும் அவருக்கு வனிதா ஆர்மி என ரசிகர்கள் கூட்டம் உருவானது.
வனிதா பலரின் கண்களுக்கு ஒரு கண்டிப்பான தாய் போலவே தெரிந்தார். ஆனால் நிகழ்ச்சியின் போது அவர் கண்ணீர் விட்டது அவரின் அம்மாவான நடிகை மஞ்சுளாவுக்காக தான்.
இந்நிலையில் அவர் தற்போது சிறுவயதில் அம்மா மஞ்சுளாவுடன் தான் சிறு குழந்தையாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும் இதில் அவர் மம்மி மிஸ் யூ மா என குறிப்பிட்டுள்ளார். இது பலருக்கும் உருக்கமாக இருந்தது.