நமது வயிற்றில் சிறுகுடலும், பெருகுடலும் சந்திக்கின்ற இடத்தில் வால் போன்ற ஒரு பகுதி இருக்கும். இங்கு ஏற்படும் பிரச்சினைதான் குடல்வால் அழற்சி என்று அழைக்கப்படுகிறது.
தொப்புள் பகுதியை சுற்றி வலி, வயிற்றின் வலது புறத்தில் கடுமையான வலி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அடிவயிற்றில் வீக்கம், பசியின்மை போன்றவை குடல்வால் அழற்சி நோயின் அறிகுறிகளாகும்.
இந்த வால்பகுதியில் ஏற்படும் அழற்சி குடலில் வீக்கத்தை ஏற்படுத்தி இரத்த ஓட்டத்தை தடுக்கும். இதனால் வயிற்றுப்பகுதியில் தாங்க முடியாத வலி ஏற்படும்.
பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் மற்றும் பாராசைட்ஸ் போன்ற கிருமிகள் குடல் வாலில் அழற்சியை ஏற்படுத்தி அங்குள்ள திசுக்களை வீக்கமடையச் செய்து குடல் வால் அழற்சியை ஏற்படுத்துகின்றன. இதனால் குடல் வால் பகுதியே சேதமடைய ஆரம்பித்து விடும்.
அந்தவகையில் இதுபோன்ற பிரச்சினையிலிருந்து விடுபட சில இயற்கை மருத்துவங்கள் உதவி புரிகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை போட்டு நன்கு கொதிக்க வைத்து பின்னர் குடிக்கவும். இது உங்களுக்கு குடல்வால் அழற்சி ஏற்படாமல் தடுப்பதுடன் குடல் பிரச்சினைகள் இருந்தால் அதனையும் குணப்படுத்தும்.
- பாதாம் எண்ணெயை மசாஜ் செய்ய பயன்படுத்தலாம். அடிவயிற்றிலும், பாதிக்கப்பட்ட பகுதியிலும் சூடான தண்ணீரில் துண்டை நனைத்து அந்த துண்டை கொண்டு சுத்தம் செய்யவும். பின்னர் பாதாம் எண்ணெயை கொண்டு பதிக்கப்பட்ட இடத்திற்கு மசாஜ் செய்யவும். உங்களுக்கு வித்தியாசம் தெரியும்வரை இதனை தொடர்ந்து செய்ய வேண்டும்.
- தினமும் இரண்டு கப் ஜின்செங் டீ குடிக்க வேண்டும். இந்த பிரச்சினை இருந்தாலும் தொடர்ந்து இந்த டீயை குடித்து வந்தால் விரைவில் நல்ல மாற்றங்கள் தெரியும்.
- கேரட் ஜூஸ், வெள்ளரிக்காய் ஜூஸ், பீட்ரூட் ஜூஸ் போன்றவை குடல்வால் அழற்சியால் ஏற்படும் வலியை உடனடியாக குறைக்கும். இந்த பழச்சாறுகளை தினமும் இரண்டு முறை குடிக்கவும். இந்த பழச்சாறுகள் மட்டுமின்றி நரி முள்ளங்கி பழச்சாறு, கொத்தமல்லி சாறு போன்றவற்றையும் வலியை குறைக்க பயன்படுத்தலாம்.
- புதினாவில் டீ தயாரித்தோ அல்லது பச்சையாக சாப்பிட்டோ குடல்வால் அழற்சி ஏற்படுவதில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.