உலகின் பல்வேறு நாடுகளில் சூழல் மாசடைவதற்கு பிரதான காரணங்களுள் ஒன்றாக பிளாஸ்டிக் பொருட்கள் காணப்படுகின்றன.
இன்று பல இலட்சம் தொன் கணக்கில் ஆங்காங்கே வீசப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்கினை அழிப்பது மிகப்பெரும் சவாலாகவே காணப்படுகின்றன.
இந்நிலையில் எந்தவொரு கடினமான பிளாஸ்டிக்கினையும் மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதற்கான வழிமுறை ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது Pseudomonas எனும் இனத்தைச் சேர்ந்த பக்டீரியாவினைப் பயன்படுத்தி இலகுவாக பிளாஸ்டிக்கினை மீள்சுழற்சிக்கு உட்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பக்டீரியாவில் இருந்து வெளிவிடப்படும் இரசாயனப் பதார்த்தத்தின் சேர்வையானது பிளாஸ்டிக் பொருட்களை சிதைவடையச் செய்து கார்பன், நைட்ரஜன் மற்றும் சக்தியாக மாற்றக்கூடியது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜேர்மனியில் உள்ள ஆராய்ச்சியாளர் குழு ஒன்றே இப் பொறிமுறையினை வெற்றிகரமாகப் பரிசீலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.