இந்தியாவில் கொரோனா வைரஸ் இந்த வயது உள்ளவர்களை அதிகம் தாக்குகிறது.?

உலக அளவில் இதுவரை 11 33 500 கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 60 400 உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்து 36 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 72 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 75 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 713 பேர் வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் வயது வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 0 – 20 வயதுவரை பாதிப்பு 9%, 21 – 40 வயது வரை 40%, 41 – 60 வயதுவரை 33%, 60 வயதிற்கு மேல் 17% ஆகும்.