நாடுமுழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மாவட்ட ரீதியான எண்ணிக்கையை சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வெளியிட்டுள்ளது.
இதில் கொழும்பு மாவட்டத்தில் 42 பேர் இதுவரை கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 7 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 5ஆவது இடத்தில் உள்ளது.
மாவட்ட ரீதியில் கோரோனா தொற்றுக்குள்ளாகியோர் எண்ணிக்கை வருமாறு,
கொழும்பு – 42 பேர்
புத்தளம் – 27 பேர்
களுத்துறை – 25 பேர்
கம்பஹா – 11 பேர்
யாழ்ப்பாணம் – 7 பேர்
கண்டி – 6 பேர்
அநுராதபுரம் – 3 பேர்
குருநாகல் – 2 பேர்
காலி – ஒருவர்
கேகாலை – ஒருவர்
மட்டக்களப்பு – ஒருவர்
பதுளை – ஒருவர்
மாத்தறை – ஒருவர்
தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளோர் – 35 பேர்
வெளிநாட்டவர்கள் – 3 பேர்
இதேவேளை, இன்றும் இருவர் முழுமையாகச் சுகமடைந்து இன்று வீடு திரும்பினர். இதுதுவரை 29 பேர் முழுமையாகக் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், நாடுமுழுவதும் வைத்தியசாலைகளில் கோரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 259 பேர் பரிசோதைக்குட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.