இதுவரை யாரும் பார்த்திராத நடிகை சிம்ரனின் சிறு வயது புகைப்படம்!

தமிழில் 1997ஆம் ஆண்டு வெளிவந்த வி.ஐ.பி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சிம்ரன்.

மேலும் நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானர் நடிகை சிம்ரன். இதன்பின் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வந்தார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் சிறந்த நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை சிம்ரன். கமல், விஜய், அஜித், சூர்யா, மாதவன் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும், சென்ற வருடம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘பேட்ட’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது யாரும் இதுவரை பார்த்திராத தனது சிறு வயது புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.